அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...
உள் அறையில் இருந்த லியாவிற்கு அவர்கள் பேசியது அனைத்தும் காதில் விழ... அழுதவாறு தன் மகனை மடியில் போட்டு தட்டி கொடுத்தாள்...
ஜோனா என்ன நினைத்தாளோ எதுவும் பேசாமல் எழுந்து லியா இருந்த அறைக்குள் தன்னை நுழைத்து கொண்டாள்...
லியா அருகில் அமர்ந்த ஜோனா லியா தோளில் சாய்ந்து கொண்டாள்...
லியா : என்ன டி...
ஜோனா : பேச வேண்டியதை விட்டுட்டு மத்த எல்லாத்தையும் பேசுறாங்க... அங்க இருந்தா கோவமா வருது... அது தான் வந்துட்டேன்...
லியா : உன் face Dull ஹ இருக்கு...
ஜோனா : tired ஹ இருக்கு டா மா...
லியா புருவத்தை சுருக்கியவாறு அவளை தன்னிடம் இருந்து விலகி அவளையே உற்று பார்க்க...
ஜோனா அவள் பார்ப்பதையே பார்த்து ஏதோ புரிந்தவளாக ஒற்றை புருவத்தை தூக்கி "என்ன..."என்பது போல் பார்க்க...
லியா அவளை மேலும் கீழுமாக பார்த்து அவளை இழுத்து காதில் கிசுகிசுக்க...
அவள் கேட்டதில் வழி விரிய பார்த்து தலையை இடது வலதுமாக ஆட்டினாள்...
லியா தன்னிச்சையாக தன் தலையில் அடித்து கொண்டு மறு கையால் ஜோனா பின் தலையில் தட்டினாள்...
ஜோனா தலையை தடவி கொண்டே " ஏன் டி..."என்று கேட்க...
லியா : "உன்னைய என்ன பண்ணலாம்... இது நீ Doctor வேற..."என்று சலித்து கொள்ள...
ஜோனா : "ஏன் டி இவ்வளோ சலிச்சுக்கிற அளவுக்கு நா என்ன டி பண்ணேன்..."என்று கேட்டவளுக்கு ஏதோ தோன்ற... யோசனையோடு அவளை பார்த்தாள்...
லியா : "என்ன..."என்று கேட்க...
ஜோனா : நீ அப்படி வரீயா...
லியா : எப்படி வந்தாலும் அது தான்... இப்ப புரியுதா...
ஜோனா : "ம்ம்ம்..."என்று யோசித்தாள்...
லியா : என்ன எத்தனை நாள் னு யோசிக்கிறீயா...
ஜோனா : ஆமா... அனுபவம் பேசுது...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???